யாழில் இளைஞர் ஒருவர் குழுவொன்றால் அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்கப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் குழுவொன்றால் அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 18 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினையே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
இளைஞர் மீது தாக்குதல் நடத்தும் போதும் சித்திரவதை செய்யும் போதும் தாக்குதல்தாரிகள் அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் சந்தேகநபர்களாக இருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
