யாழ்.நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கிளிநொச்சியில் கற்கள் வீசி தாக்குதல், கண்ணாடி சேதமடைந்து சாரதி காயம்
6 months ago


யாழ்.நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கிளிநொச்சியில் கற்கள் வீசி தாக்குதல், கண்ணாடி சேதமடைந்து சாரதி காயம்
வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து யாழ் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து மீதும், பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது கிளிநொச்சியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை - யாழ்ப்பாணம் பேருந்து, பரந்தன் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
எனினும் இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
