
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது.
மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வேனை நிறுத்திய வேளை, பின்னால் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து வேனின் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் .
சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
