உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாள், தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் விற்பனை நிலைய கண்காட்சி

3 months ago



சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான நேற்று தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகள் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் இலங்கை அகதிகள் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பல காலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் தாம் இந்த விழாவின் போது சந்தித்ததாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் தாம் இந்த விழாவின் போது சந்தித்ததாக சாணக்கியன் கூறினார்.