வடக்கு மாகாணம் தழுவிய விவசாயக் கண்காட்சி எதிர்வரும் ஒக்ரோபர் 2, 3, 4ஆம் திகதிகளில் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது
வடக்கு மாகாணம் தழுவிய விவசாயக் கண்காட்சி எதிர்வரும் ஒக்ரோபர் 2, 3, 4ஆம் திகதிகளில் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது என்று பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா சிறீரங்கன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்கள பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
மேலும், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் "சூழல்நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு விவசாயக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயப் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் ஒக்ரோபர் 2ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகும் இந்தக் கண்காட்சி 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
அத்துடன், 30இற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புகளை உள்ளடக்கியதாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - என்றார்.