இலங்கையில் 300 பார் பெர்மிட்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
6 months ago

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முன்னாள் எம்.பிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட பார் பெர்மிட்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
300 பார் பெர்மிட்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறையற்ற விதத்தில் பார் பெர்மிட்களைப் பெற்ற முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட நபர்களின் பெயர் விபரங்களையும் தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
