சஜித் பிரேமதாஸவுடன் எந்தவிதமான இரகசியமான ஒப்பந்தத்தையும் செய்யவில்லை - எம்.பி. சுமந்திரன் தெரிவிப்பு.

4 months ago


சஜித் பிரேமதாஸவுடன் எந்தவிதமான இரகசியமான ஒப்பந்தத்தையும் செய்யவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்த போது உடன்பாடுகள் ஏதும் செய்யப்பட்டனவா? அவ்வாறு செய்யப்படாமைக்கான கார ணங்கள் என்ன என்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கைத் தமிழ் அரசு கட்சி தென்னிலங்கை வேட்பாளர்களுடன் எந்தவிதமான எழுத்துமூல உடன்பாடுகளையும் இதுகால வரையில் மேற்கொண்டதில்லை. அந்த வகையில் எமது நிலைப்பா டானது ஜனாதிபதி வேட்பாளர்கள் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழர்களின் விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவிக்க வேண்டும் என்பதே. எம்மைப் பொறுத்தவரை யில் தமிழ் மக்களுடன் உடன் பாடுகளை எட்டுவது வாக்குறுதிகளை அளிப்பது போன்ற செயல்பாடுகளைத் தவிரவும் தங்களுடைய விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டு ஒட்டு மொத்தமான நாட்டுக்கும் கூற வேண்டும் என்பதே முக்கியமானது.

அந்த வகையில் சஜித் பிரேமதாஸ தனது நிலைப்பாட்டை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அமைவாகவே நாம் சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம் என் றார். 

அண்மைய பதிவுகள்