காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க விடாத கர்நாடக அரசுக்கு கண்டனம்.

5 months ago


காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அ. தி. மு.க. பொதுச் செயலாளர் பழனிச்சாமி கூறுகை யில்,

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், காங்கிரஸின் தயவுக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது சரியல்ல. மேடையில் மாநில உரிமை பேசிவிட்டு, தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடுவது கண்டனத்துக்குரியது- என்றார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன் னீர்செல்வம் தெரிவிக்கையில், தண்ணீர் திறக்க மாட்டோம் என கர்நாடக முதல்வர் பேசியிருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இதுகுறித்து கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க. முன்வராதது கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டார்.

பா.ஜ.க. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தபோது, வறட்சி சூழ்நிலையிலும் தண்ணீர் திறந் துவிட்டார்கள். காங்கிரஸ் ஆட் சிக்கு வந்த பிறகுதான், இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனது உருவ பொம்மையை எரிக்கும் தமிழக காங்கிரஸார், சித்தரா மையாவை சந்தித்து தண்ணீர் திறந்துவிடுமாறு சொல்லியிருந்தால் பாராட்டி இருப்பேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழி போடுவதை ஏற்க முடியாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில. கர்நாடகாவில் உள்ள அணைகளில் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளபோதும், தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது கண்டனத்துக்குரியது. மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவைச் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் -என்றார்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவிக்கையில், தமிழக அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி, உரிய முடிவெ டுக்க வேண்டும் என்று வலியு றுத்தினார்.



அண்மைய பதிவுகள்