வவுனியா, செட்டிக்குளம், மெனிக்பாம் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2 months ago



வவுனியா, செட்டிக் குளம், மெனிக்பாம் பிரதேச மக்கள் நேற்று(11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிக்குளம், மெனிக்பாம் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டு நீண்டகாலமாக வசித்துவரும்  குடும்பங்களே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் பிரதேசத்தில் வாழும் 70 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கான காணி வேண்டும் என கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 8 வருடங்களுக்கு மேலாக உறவினர்கள் வீடுகளில் வசித்து வரும் இவர்களுக்கு காணி தருவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதும் இதுவரை வழங்கப்படவில்லை என இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

அண்மைய பதிவுகள்