மசகு எண்ணெய் இறக்குமதியில் அரசாங்கம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டம்.

4 months ago


தவறான முன்கூட்டிய கணிப்பு காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதியில் அரசாங்கம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டத்தை சந்தித்துள்ளது.

வர்த்தக புலனாய்வுப்பிரிவாக நிறுவப்பட்ட எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளின் தவறான கணிப்பால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயரும் என அதிகாரிகள் கூறிய தவறான கணிப்பால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஜூலை மாதம் 83.93 டொலராக இருந்த மசகு எண்ணெய் விலை ஆகஸ்ட் மாதத்தில் பீப்பாய்களுக்கு 82.52 டொலராக குறைந்துள்ளது.

இதனால் ஆகஸ்ட் மாதம் மசகு எண்ணெய் விலை உயரும் என வெளியான தவறான அறிக்கையுடன் கச்சா எண்ணெய் கப்பலை அனுப்பியதால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென மசகு எண்ணெய் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்