மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பு - பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
அவரின் பூதவுடல் நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பின்னர் எதிர்வரும் வௌ்ளிக்கிழமையிலிருந்து திருகோணமலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் 91 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (30) காலமானார்.