87 கிலோ கேரள கஞ்சாவுடன் கொடிகாமத்தில் இருவர் கைது!

5 months ago


யாழ். கொடிகாமத்தில் வீடொன்றில் 87 கிலோ கேரள கஞ்சாவை சாவகச்சேரி பொலிஸார் நேற்று கைப்பற்றினர். அத்துடன், இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சங்குப்பிட்டி பாலத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது காருக்குள் சூட்சுமமாக மறைத்து கடத்தப்பட்ட 500 கிராம் கஞ்சாவுடன் நேற்று முன் தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வவுனியாவை சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட் டார். அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் கொடிகாமத்தில் வசிக்கும் நபர் ஒருவரே தனக்குக் கஞ்சாவை தந்தார் என்று வாக்குமூலம் அளித்தி ருந்தார்.

இதையடுத்து, கொடிகாமத்தில் அந்த நபரின் வீடு நேற்று வெள்ளிக் கிழமை அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது, 87.67 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

பிரதான சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் வீட்டிலிருந்த சந்தேகநபரின் தாயார் கைது செய்யப்பட்டார்.

கைதான இருவரையும் நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தினர். இதன் போது, இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

தப்பியோடியவரை கைது செய்ய சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.