இலங்கையில் பரிசோதனைக்கு உட்படுத்தி அங்கீகரித்த இடங்களில் மட்டும் பன்றி இறைச்சி .-- வைத்தியர் சுசிர பிரியசிறி தெரிவிப்பு

2 weeks ago



ஆபிரிக்க தொற்றுக்குள்ளான பன்றிகள் இறைச்சி            ஆக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னரே பன்றி இறைச்சி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட இடங்களில் மாத்திரம் இறைச்சி கொள்வனவு செய்யுமாறும் அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுசிர பிரியசிறி தெரிவித்தார்.

அதனால், பன்றி இறைச்சியை அச்சமின்றி உணவுக்காக கொள்வனவு செய்ய முடியுமென்றும் இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவில் சுகாதார நடைமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலின் காரணமாக பன்றி இறைச்சி உற்பத்தியில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

பன்றி பண்ணைகளிலுள்ள நோயினால் பன்றிகள் உயிரிழந்தன.

பன்றி இறைச்சி உற்பத்தியாளர்களுக்கும் பொருளாதார ரீதியான சிக்கலும் ஏற்பட்டது.

இந்த தொழிற்றுறையை வழமைக்கு கொண்டு வருவதற்காக அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெருந்தொகை கடனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

இதற்காக நேற்று முன்தினம் விசேட குழு நியமிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், மிக விரைவில் இந்த தொழிற்றுறையை வழமைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நாத்தார் பண்டிகை காலத்தில் பொதுவாகவே பன்றி இறைச்சிக்கான நுகர்வும் அதிகரித்தே காணப்படும்.

பன்றி இறைச்சியை உட்கொள்வது தொடர்பில் அச்சப்பட வேண்டியதில்லை.

இதுவரையில், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் ஆரோக்கியமான பன்றி பண்ணைகள் மற்றும் ஆரோக்கியமற்ற பன்றி பண்ணைகளை அடையாளங் கண்டு வருகின்றன.- என்றார்.


அண்மைய பதிவுகள்