காசாவில் கொல்லப்பட்டவர்களில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையிலான சண்டை ஓராண்டைத் தாண்டி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 43,300 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இன்னும் பலரின் சடலங்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் வழங்க தகவலில், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதாவது மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வழங்கிய தகவலில், கடந்த 6 மாத காலங்களில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்து இருப்பதோடு, காசா போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான உயிரிழப்புக்கு, பொதுமக்கள் அதிகமுள்ள இடங்களில் பரந்த அளவிலான இஸ்ரேலின் ஆயுத பிரயோகமே காரணம் என்று தெரிவித்துள்ளது.