ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயம்

2 months ago


ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

நகர அபிவிருத்தி அமைச்சிற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை குண்டுதாரியும் கொல்லப்பட்டுள்ளார்.

தற்கொலை குண்டுதாரி கட்டிடத்திற்கு அருகில் வந்தவேளை அவரை இனம்கண்ட பாதுகாப்பு தரப்பினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் அவர் வெடித்து சிதறியுள்ளார்.

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தற்கொலை குண்டுதாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.