கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்த அழைப்பினை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நிராகரிப்பு

2 months ago



கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்த அழைப்பினை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நிராகரித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள் வார ஏடு ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருகோணமலையில் நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றுக்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வருகை தந்த போது அவரை கிழக்கு மாகாண ஆளுநர் அவரது அதிகாரபூர்வ இல்லத்துக்கு உணவு விருந்துக்காக அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீங்கள் திருகோணமலைக்கு வருவதால் ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வாருங்கள் என அவர் அழைத்துள்ளார்.

எனினும், இந்த அழைப்பினை   ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தல் பரப்புரை       தொடர்பான அரசியல் சந்திப்புக்காக நான் வருகின்றேன்.

இந்த நேரத்தில் உங்களிடம் வருவது நல்லதல்ல. ஜனாதிபதியாக பொது நிகழ்வுகளில் பங்கேற்க வருகின்ற போது, ஆளுநரின் அதிகார பூர்வ இல்லத்திற்கு வருவேன் எனவும், அரசியல் கூட்டத்துக்கு வருகை தந்த பின்னர் ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு உணவருந்தச் செல்வது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்