மைக்ரோசாப்ட் (Microsoft) மேலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது.

19 hours ago



மைக்ரோசாப்ட் (Microsoft) மேலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது.

இந்த நடவடிக்கை பிரதானமாக குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பாதிக்கும் என்று இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்கள் பிசினஸ் L (Business Insider) தெரிவித்தனர்.

நிறுவனம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.

மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் வரவிருக்கும் பணிநீக்கங்களை ஒப்புக்கொண்டு, உயர் செயல்திறன் திறமை மீது நிறுவனத்தின் கவனத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

ஊழியர்களின் செயல்திறன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறினால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிறுவனத்தின் முக்கியமான பாதுகாப்புப் பிரிவு உட்பட பல துறைகள் இந்த வேலைக் குறைப்பின் தாக்கத்தை எதிர்கொள்ளும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த செயல்திறன் அடிப்படையிலான வெளியேற்றங்கள் காரணமாக காலியாக இருக்கும் வெற்றிடங்களுக்கு பெரும்பாலும் புதிய பணியாளர்களால் நிரப்பப்படுவார்கள் என்றும், மைக்ரோசாப்டின் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை கடுமையாக மாறாமல் இருக்கலாம் என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 228,000 நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

இந்த நடவடிக்கை மைக்ரோசாப்டின் நீண்டகால தொழிலாளர் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.

மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் 2014 இல் பொறுப்பேற்றதிலிருந்து, பல சுற்று பணி நீக்கங்களை மேற்கொண்டார்.

அதே ஆண்டில் ஒரு பெரிய ஊழியர் குறைப்பு 18,000 தொழிலாளர்களை பாதித்தது-

அந்த நேரத்தில் மைக்ரோ சாப்டின் மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 14% சதவீதமானோர் பணி நீக்கப்பட்டனர்.

சமீபத்திய ஆண்டுகளில், மைக்ரோ சாப்ட் பல்வேறு துறைகளில் மூலோபாய வேலை குறைப்புகளை தொடர்ந்து செய்து வருகிறது.

2023 ஆம் ஆண்டில், எக்ஸ்பாக்ஸ் உட்பட பல்வேறு பிரிவுகளைக் குறைத்து சுமார் 10,000 ஊழியர்களை நிறுவனம் விடுவித்தது.

மைக்ரோசாப்ட் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் கேமிங் பிரிவில் இருந்து ஏறக்குறைய 2,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்தது.

2024 செப்டம்பரில், மைக்ரோசாப்ட் தனது பணியாளர்களை மேலும் குறைத்தது.

650 பணிநீக்கங்கள் அதன் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.