மரம் கடத்திய வாகனம் மோதி மாணவன் மருத்துவமனையில்

6 months ago

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பிரதேசத்துக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் தேக்கமரக் குற்றிகளைக் கடத்திச் சென்ற ஹைஏஸ் வாகனமொன்று மோதியதில் உயர்தர மாணவன் படுகாயம் அடைந்துள்ளான்.

இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியால் மாணவன் மாலை நேர வகுப்பு முடித்து சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோதே வேகமாக வந்த ஹைஏஸ் வாகனம் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்துத் தொடர்பான விசாரணையில் வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் தேக்கமரக்குற்றிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

சாரதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

படுகாயமடைந்த மாணவன் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச் சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப் பட்டுள்ளான். 

அண்மைய பதிவுகள்