பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் தொடர்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை அரசாங்கம் அறிவிப்பு

2 months ago



பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக புதிய   அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் அமைச்சரவை       சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது நாடாளுமன்றம் ஒன்று இல்லை. எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது குறித்த                         நடவடிக்கைகளை எடுக்க முடியாது.

இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது.

எனினும் இந்த விடயத்தில் புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் போது உரிய தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.