சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமையவே எமக்கும் செயற்படவேண்டியேற்படும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டுள்ள சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமையவே எமக்கும் செயற்படவேண்டியேற்படும். அவ்வா றில்லை எனில் மீண்டும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரி டும். எவ்வாறிருப்பினும் அந்த இணக்கப்பாட்டில் நியாயமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்ற யதார்த்தமான வாக் குறுதியை மக்களுக்கு வழங்குவதாக பாராளுமன்ற உறுப் பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்-
பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளமையால் 26 சத வீதமான மக்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய் வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். பணவீக்கம் குறைவடைதல் என்பது பொருட்களின் விலை அதிகரிக்கும் வேகம் குறைவடைவதாகும். மாறாக பொருட்களின் விலை குறைவடைவதைக் குறிக்காது. மறுபுறம் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு பதிலாக அவற்றின் எடை குறைக்கப்பட்டுள்ளது.
நடுத்தர மக்கள் 79 சதவீதமானோர் கடந்த காலத்தை விட தற்போது சந்தோசமாக வாழவில்லை என்றும் அந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். நாணய நிதியத்துடனான ஒப் பந்தத்துக்கமைய எவ்வாறு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். அதிக வருமானம் பெருவோருக்கான வருமான வரியை தற்காலிகமாக அதிகரித்து, ஏனையோருக்கு நிவாரணங்களை வழங்க முடியும்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவரும் நியாயமான வரி சலுகைத் திட்டம் நடைமு றைப்படுத்தப்படும். நாம் யதார்த் தமான வாக்குறுதிகளை மக்க ளுக்கு வழங்கியுள்ளோம்-என்றார்.