பிரித்தானியாவில் இரு சகோதர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

4 months ago


பிரித்தானியாவில் இரு சகோதர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் மேற்கு Yorkshire Liversedge பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதர்கள் கடந்த திங்கட்கிழமை(12) வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

இதன்போது, 13 வயதுடைய Yousuf Ahmad மற்றும் 10 வயதுடைய Muhammad Ahmad என்ற இரண்டு சிறுவர்களே காணமல் போயுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதுடன், காணாமல் போன சகோதர்கள் இருவரும் ஒன்றாக இருக்கலாம் என்று நம்புவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

13 வயது சிறுவனான யூசப் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமுடையவர் என்றும் அவர் கடைசியாக ஸ்காட் கிரே ஹூடி (Scott grey hoodie), நார்த் ஃபேஸ் கால்சட்டை(North Face trousers) மற்றும் கண்ணாடி அணிந்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், 10 வயது சிறுவனான முகமது சுமார் 4 அடி 7 அங்குலம் உயரமுடையவர் என்றும் கருப்பு ஹூடி(black hoodie) சாம்பல் நிற டிராக்சூட் பாட்டம்ஸ்(grey tracksuit bottoms) அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.