உலகத் தமிழராய்ச்சி 4 ஆவது மாநாட்டு படுகொலையின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல்

4 hours ago



உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பேரில் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் இன்று(10) காலை இடம்பெற்றது.

இதன் பொழுது உயிர் நீத்த உறவுகளை நினைவுறுத்தி பொதுச் சுடரினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் மலர் கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டன.

இதன் போது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகரன், நாவலன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைய பதிவுகள்