தமிழ் சினிமாவின் பொக்ஸ் ஓபீஸ் வசூல் நாயகனான கார்த்தி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'சர்தார் 2 ' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதன் போது மூத்த நட்சத்திர நடிகரும், பல்துறை ஆளுமையுமான சிவக்குமார் பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'சர்தார் 2' திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் முக்கிய வேடத்தில் நடிகர் தேவேந்திரன் தேவா நடிக்கிறார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். புலனாய்வு வகைமையிலான இந்தத் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லஷ்மண குமார் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் வெளியான 'சர்தார்' படத்தின் முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியா பாரிய வெற்றியை பெற்றது. தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் பெரும் எதிர்பார்ப்பை தந்துள்ளது.