காலிமுகத்திடலில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தானவை. ஆசு மாரசிங்க தெரிவிப்பு.
காலிமுகத்திடலில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை.
அனைத்து அணியினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிக்கவே எதிர்பார்த்துள்ளோம்.
எதிரணியில் உள்ள அனைவரையும் ஒன்றிணைப்பதே எம்முடைய எதிர்பார்ப்பாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியினருடனும் கலந்துரையாடல்கள் இடம் பெறுகின்றன.
நாம் முடிந்த அளவு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.
அரசாங்கம் 833 வாகனங்களை காலிமுகத்திடலுக்கு அண்மையில் நிறுத்தியுள்ளது. அது அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு ஏற்ற சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூற முடியும்.
நாம் ஆட்சியிலிருந்து விலகியவுடன் வாகனங்களை அரசாங்கத்திடம் அன்றே ஒப்படைத்தோம்.
ஆனால் தற்போது தரித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மகிந்த ராஜபக்ஷவின் காலத்திலிருந்து பாவிக்கப்பட்ட வாகனங்களாகும்.
அவை மஜிக் வாகனங்கள் அல்ல. வாகனங்களை மீளக் கையளிப்பது சாதாரண சம்பிரதாயமாகும்-என்றார்.