முல்லைத்தீவு காட்டினுள் மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கிய ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைது
3 months ago

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பு மன்ன கண்டல் ஒதுக்க காட்டினுள் அத்துமீறி நுழைந்து கட்டுத்துவக்கால் மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கும் போது புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரி தலைமையின் கீழ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் திணைக்களத்தினரால் சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் இதன்போது கைது செய்யப்பட்டதோடு மரை இறைச்சியும், மரையை சுடுவதற்கு பயன்படுத்திய கட்டுத்துவக்கும் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து மேலதிக நடவடிக் கைகளுக்காக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
