171 பெரும் அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை!அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.

5 months ago


171 பெரும் அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை!அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.

கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடிகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 171 பெரும் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரி வித்துள்ளார்.

இவற்றில் 58 வேலைத் திட்டங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், "குடிதண்ணீர், சுகாதாரம், கல்வி, வீதிகள் போன்ற துறைகள் தொடர்பான 58 திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள 171 திட்டங்களில் 2 வெளிநாட்டு மானிய திட்டங்கள், 3 வெளிநாட்டு கடன் திட் டங்கள் மற்றும் 8 திட்டங்கள் உள்ளூர் நிதியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த 08 திட்டங்களும் உள்ளடங்கலாக நிதியமைச்சின் அறிக்கைகளின்படி அடுத்த வருடத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கை 113 ஆகும்.

கோவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பல பெரிய அளவிலான திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.

வெளிநாட்டு உதவி மற்றும் கடனில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இருந்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னர் இந்த வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு அவர் தலையிட்டார். இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும். இது எதிர்வரும் ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்க அனுமதிக்கும்." என்றும் அமைச்சர் கூறினார்.

அண்மைய பதிவுகள்