ஐ.நா அபிவிருத்தி வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடாவுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்குமாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு
3 months ago
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்குமாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.