இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மாவை சேனாதிராசா நியமிக்கப்படலாம்
1 month ago
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மாவை சேனாதிராசா நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் பா.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராசா எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றிருந்தது.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மாவை சேனாதிராசாவை நியமிக்க வேண்டுமென கட்சிக்குள் ஒரு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியையும், தமிழ் தேசியக் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தக் கூடிய- அனுபவமுள்ள- தலைவரான அவர், பாராளுமன்ற உறுப்புரிமையை பெறவேண்டுமென அந்தத் தரப்பு கோரியுள்ளது.