உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு 4ஆவது இடம்.-- அமெரிக்க ஊடகம் ஒன்று தகவல்
2 months ago
அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு நான்காவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
சாகசம், கலாச்சார தாக்கம், தொழில் முனைவு, பாரம்பரியம், தொழில் செய்ய வெளிப்படைத்தன்மை, ஆற்றல், வாழ்க்கைத்தரம் முதலான பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 73 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன.
அவ்வகையில் ஒவ்வொரு காரணிக்கும் புள்ளிகள் கொடுக்கப்பட, 94.1 புள்ளிகள் பெற்று கனடா பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நாடு சுவிட்சர்லாந்து. பட்டியலில் ஜப்பான் இரண்டாவது இடத்தையும், அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.