இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

3 months ago



இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ள பின்னணியிலேயே, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத் தியுள்ளது.

அத்துடன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுவது, பாதுகாப்புப் படையினரின் குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது, அப்பாவி மக்கள் மீதான வன்முறைகளைத் தொடர்வது என்பன அநுர தலைமையிலான அரசாங்கத்தில் தொடரக்கூடாது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் போர்க்.  குற்றங்களுக்கான நீதிப் பொறிமுறைகள் தொடர்பில், பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகள் செய்த சிபார்சுகளை முன்னைய ஆட்சியாளர்கள் நிராகரித்தமைக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.