தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக கொழும்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் முதலிடம்
1 month ago
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாகும்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் சத்துரங்க அபேசிங்க 127,166 வாக்குகள், சுனில் வட்டகல 125,700 வாக்குகள் மற்றும் லக்ஸ்மன் நிபுணஆரச்சி 96,273 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 145, 611 வாக்குகள். ஹர்ஷ டி சில்வா 81,473 வாக்குகள் மற்றும் முஜிபுர் ரஹ்மான் 43, 737 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.