இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சி. சிறீதரன் செயல்படுவார் மத்திய குழு அறிவிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சி. சிறீதரன் செயல்படுவார் என்று அந்தக் கட்சியின் மத்திய குழு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.
இதேவேளை, கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று சிறீதரன் மேலும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 7 ஆசனங்களை கைப்பற்றியது.
அத்துடன், தேசியப் பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தை கைப்பற்றி 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக உள்ளது.
தற்போது தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறீதரன் மட்டுமே நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
அவர் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
