நல்லூர் சப்பறத் திருவிழா காட்சிகள்

4 months ago


வரலாற்று சிறப்புமிக்க யாழ் நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் இருபத்தியிரண்டாம் சப்பறத்திருவிழா மாலைத் திருவிழா 31.08 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன.

கருவரையில் வீற்று இருக்கும் அலங்கார வேலனுக்கும் விஷேட,அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன்,வள்ளி, தெய்வானைக்கு விஷேட,அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று எம்பெருமான் வீற்று, வள்ளி, தெய்வானை வீற்று உள்வீதியுடாக வந்து வெளிவீதியுடாக வலம் வந்து இடப வாகன திருசப்பறத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்...

இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.

கடந்த 09.08 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவ 25 நாட்கள் இடம்பெறும் செப்டம்பர் 1 ஆம் திகதி இன்று தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை தீர்த்ததிருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.செப்டம்பர் 3 ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வருகின்றது குறிப்பிடத்தக்கது