ஜ.சி. சியில் இலங்கையை பாரப்படுத்துவதே நீதிக்கு வழி - பிரிட்டன் தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண் உமா குமரன் தெரிவிப்பு
ஐ. நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ஐ. சி. சி.) பாரப்படுத்தினால் மட்டுமே நீதியை நிலை நாட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈழத் தமிழ் பெண் வேட்பாளரான உமா குமரன், பிரிட்டனை தளமாகக் கொண்டியங்கும் இணையம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்த வேண்டும். பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்.
மே 2009க்கு முன்னதாகவும் மே 2009 இல் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்காக இதுவரை எவரும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது உண்மையாகவே நம்பமுடியாத விடயம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச சூற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்ட முடியும் என்றார்.