மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங் காண பொலிஸார் மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

6 hours ago



மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களைப் போலவே வரையப்பட்ட இரண்டு படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

மேலும் அவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்திருப்பின் 0718591363,0232223224 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்