காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது.

4 months ago


காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் நேற்றுக் காலை 10 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 68 பலஸ்தீனர்கள் பலி யாகினர். மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் உள்ள முக்கிய இடங்களான ரபா, பெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது. குறிப்பாக, வெஸ்ட் பேங்கில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேலிய இராணுவத்தினர் புதன்கிழமையன்று அந்தப் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதில் 18 பலஸ்தீனர்கள் பலியாகினர். அதேவேளையில், கிழக்கு ரபாவில் ஏழு பேர் கொல்லப் பட்டனர். நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் நான்கு பலஸ்தீன போராளிகளை இஸ்ரேலியப் படைகள் கொன்றன. வெஸ்ட் பேங்கில் கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்தும் மிகப் பெரிய தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட னர். மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரை காஸா மீதான இஸ்ரேலின் போரில் 40,602 பேர் கொல்லப்பட்டனர். 93 ஆயிரத்து 855 பேர் காயமடைந் துள்ளனர். மேலும், ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1.139 பேர் கொல்லப்பட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்தும் எதிர்வினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது.

அண்மைய பதிவுகள்