உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவல் கிடைத்தும் தடுக்கத் தவறிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் முன்னிலை

3 months ago


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, தற்போது உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் நிலந்த ஜயவர்தன அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 75 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்துமாறு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அவர் நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்தார்.

அது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக இன்று (07) நீதிமன்றத்தில் முன்னிலயாகுமாறு உயர் நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

அண்மைய பதிவுகள்