இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) யாழில் கறுப்புக்கொடி போராட்டம்

2 months ago



இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) யாழ்ப்பாணத்தில்  கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சிவகுரு ஆதீனத்தின் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.