முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு பெப்ரவரி 27 இற்கு ஒத்திவைப்பு

3 weeks ago



முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான்                    நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, காணாமல்போனோர் அலுவலகத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி  ரத்நாயக்க, சட்டவைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன்,          கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.

அண்மைய பதிவுகள்