உலக செல்வந்தரான எலான் மஸ்க் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார்
உலக செல்வந்தரான எலான் மஸ்க் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எலான் மக்ஸ்குக்குச் சொந்தமான, 'ஸ்டார் லிங்' இணையசேவை விரைவில் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்புக்கு வெளியில் உள்ள இடங்களின் இணைய வலையமைப்பைக் கருத்திற் கொண்டு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில், எலான் மஸ்க் கலந்துகொள்வாரா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருந்த நிலையில், அவர் கலந்துகொள்வார் என்பதை ஜனாதிபதியின் செயலாளர் ஜனக ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இணைய சேவை ஆரம்பிக்கப்படும் தினத்தன்று எலான் மக்ஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸில் உள்ளவர்களுடன் உரையாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
