சஜித் பிரமதாஸவுக்கு ஆதரவு அளிக்குமாறு சில வெளிநாட்டுத் தூதரகங்கள் மறைமுகமாக வற்புறுத்துகின்றன”, என்று பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு.
3 months ago
சஜித் பிரமதாஸவுக்கு ஆதரவு அளிக்குமாறு சில வெளிநாட்டுத் தூதரகங்கள் மறைமுகமாக வற்புறுத்துகின்றன”, என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் பணிமனையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், "தமிழ் அரசுக் கட்சியின் குறிப்பிட்ட சில தலைவர்களை மாத்திரம் சொல்லி விடமுடியாது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்குமாறு சில வெளிநாட்டு தூதரகங்கள்கூட மறை முகமாக வற்புறுத்தி வருகின்றன.
தற்போதைய நிலையில் புதிய ஜனாதிபதியாக யார் வரப் போகின்றார் என்பதைவிட தமிழ் மக்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக திரண்டு விடுவார்களோ என்பதே எல்லோரினதும் அச்சமாக உள்ளது என்றும் கூறினார்.