
வவுனியாவில் போதைப் பொருளுடன் வயோதிபப் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மடுகந்தை விசேட அதிரடிப் படையினரால் செட்டிக்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 1740 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 2380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
