பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
3 months ago

போர்க் காலத்தில் கைவிடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வெகுவிரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வடமாகாணத்தை விரைவில் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவை காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்பன விரைவில் சீரமைக்கப்பட்டு இயங்கு நிலைக்குக் கொண்டு வரப்படும்.
அத்துடன், உப்பள அபிவிருத்திகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
