யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டாலும் இஸ்ரேலிற்கு எதிரான யுத்தம் தொடரும்.-- பாலஸ்தீன மக்கள் உறுதி

2 months ago



யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ள போதிலும் இஸ்ரேலிற்கு எதிரான யுத்தம் தொடரும் என பாலஸ்தீன மக்கள் உறுதி வெளியிட்டுள்ளனர்.

அழிவடைந்த யுத்தத்தினால் சிதையுண்டுபோயுள்ள கான் யூனிசில் உள்ள பாலஸ்தீனியர்கள் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ள போதிலும் யுத்தம் தொடரும் என உறுதியாக தெரிவிக்கின்றனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசி சுயாதீன செய்தியாளர்களைப் பயன்படுத்தி பாலஸ்தீனியர்களின் கருத்தினைப் பெற்றுள்ளது.

இஸ்ரேல் பிபிசியை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யுத்தம் யாஹ்யா சின்வரையோ அல்லது வேறு எவரையுமோ நம்பியிருக்கவில்லை எந்த தலைவர் அல்லது அதிகாரி மீது நம்பிக்கையை வைத்து இந்த யுத்தத்தை பாலஸ்தீனிய மக்கள் முன்னெடுக்கவில்லை என வைத்தியர் ரமடான் பாரிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இது பாலஸ்தீன மக்களிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழிப்பு போர், பிரச்சினை என்பது யஹ்யா சின்வரை விட மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் எங்களை மாத்திரம் அழிக்கவிரும்பவில்லை,அவர் முழு மத்திய கிழக்கையும் அழிக்க விரும்புகின்றனர்.

அவர்கள் லெபனானில் சிரியாவில் யேமனில் போரிடுகின்றனர் என அட்னன் அசூர் என்பவர் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கும் யூதர்களிற்கும் இடையிலான யுத்தம் 100 வருடங்களிற்கு மேல் 1919ம் ஆண்டிலிருந்து இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சின்வரின் மரணம் ஹமாசிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு நான் அப்படி நினைக்கவில்லை ஹமாஸ் என்பது சின்வரில்லை அது மக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்