காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எழுதிய சீத்துவக்கேடு என்ற "தொலைந்துவிட்ட வாழ்வியல் நினைவுகள்” கட்டுரை நூலின் அறிமுக விழா


காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எழுதிய சீத்துவக்கேடு என்ற "தொலைந்துவிட்ட வாழ்வியல் நினைவுகள்” பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நூலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நல்லை ஆதீன மண்டபத்தில் காரை சுந்தரம்பிள்ளை பெயரால் அமைந்த அரங்கில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கௌரவ விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவனும் சிறப்பு விருந்தினர்களாக ஜீவநதி சஞ்சிகை ஆசிரியர் க. பரணீதரன், எங்கட புத்தகங்கள் குழும நிறுவுநர் கு. வசீகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வரவேற்புரையை கவிஞர் காரை வ. வடிவழகையனும் வாழ்த்துரையை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவும் முகப்புரையை வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரனும் நயவுரையை கவிஞர் சோ. பத்மநாதனும் ஆற்றினர்.
நூலின் முதற்பிரதியை மூத்த ஆசிரியர் பராசக்தி கந்தையா வெளியிட்டு வைக்க ஆளுநர் நா. வேதநாயகன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் காரைக்கவி சார்பில் பதிப்பு துறையில் சாதனை படைத்து வரும் ஜீவநதி பதிப்பாசிரியர் கலாமணி பரணீதரனுக்கு பதிப்புச் சித்தர் என்ற கௌரவப்பட்டதை ஆளுநர் வழங்கிச் சிறப்பித்தார்
நிகழ்வில் பேராசிரியர் இரகுபரன், மருத்துவர் சத்தியமூர்த்தி, எழுத்தாளர்கள், பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
