இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை கௌதம் அதானி முந்தினார். ஹூருன் இந்தியா நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் முதலாவது பணக்காரர் பட்டியலை வெளியிட்டது.

4 months ago

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை கௌதம் அதானி முந்தினார். ஹூருன் இந்தியா நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் முதலாவது பணக்காரர் பட்டியலை வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் 2020இல் 4ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியை முந்தினார். அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் 11. 60 இலட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

அதானியின் சொத்து கடந்த ஓராண்டில் 95 சதவீதம் உயர்ந் துள்ளது. ஹிண்டன்பர்க் அறி கையால் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு அவரது சொத்து கடந்த ஒருவருடத்தில் வேகமாக அதி கரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 95 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு 1,021,600 கோடி ரூபாய் சொத்து குவிந்துள்ளது. இந்தியாவின் பணக்காரர் பட் டியலில் இரண்டாம் இடத்தில் 10.14 இலட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் முகேஷ் அம் பானி உள்ளார். 

அண்மைய பதிவுகள்