வடமாகாண சித்திரப் போட்டியில் முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவி மயூரன் ஆருதிக்கு தங்கப் பதக்கம்.
2 months ago
வடக்கு மாகாண அளவிலான சித்திரம் வரைதல் போட்டியில் முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவி மயூரன் ஆருதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மாகாண மட்ட ஆரம்ப பிரிவுக்கான சித்திரம் வரைதல் போட்டி நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியிலேயே ம. ஆருதி முதலிடத்தைப் பெற்றார்.
இந்த மாணவியை ஆசிரியை திருமதி ஜெயசீலன் விமலாதேவி நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.