கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் நிலையில் அருகில் உள்ள பிரதேச மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

9 hours ago



கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றப்படும் நிலையில் கண்டாவளை, ஐயன்கோயிலடி பெரியகுளம், ஊரியான்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கண்டாவளை மகாவித்தியாலயத்தில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 371 பேரும் ஐயன்கோயிலடி பாடசாலையில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும் ஊரியான்பகுதியில் 62குடும்பங்களைச் சேர்ந்த 190 பேரும் பெரிய குளம் பகுதியைச் சேர்ந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகம் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.