புதிய தலைவர், பணிப்பாளர் சபை நியமனத்தை கனடியத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
இந்த நியமனம் தமிழ் சமூகத்தின் நலன்களுக்கான பணியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது என கனடியத் தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கனடியத் தமிழர் பேரவையின் புதிய தலைவராக குமார்ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கனடியத் தமிழர் பேரவையின் புதிய பணிப்பாளர் சபை வருமாறு:- • தலைவர் :- குமார்ரட்ணம்
• உப தலைவர்:- வைத்தியர் ஷான் ஏ. சண்முகவடிவேல்
• செயலாளர. :- பிரகல்
• பொருளாளர் டில்ஷான் நவரத்னராஜா
• பணிப்பாளர்கள் குழு :-
நாதன் வீரசிங்கம், சகீலா சங்கர்
ரவி பொன்னம்பலம்
தமிழ் கனடிய சமூகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக இந்த ஆண்டு தொடர்ச்சியான பொது ஆலோசனைகளை இந்த பணிப்பாளர் சபை ஆரம்பிக்கும் என கனடியத் தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது