
உலகின் இரண்டாது மிகப் பெரிய வைரம் பொட்சு வானாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 கரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1905ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட 3,106 கரட் கல்லினன் வைரத்துக்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். பொட்சுவானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 கரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரம் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியது. அதன் விலையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
